இந்தியா

வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை : காவல்துறையினருக்கு காஷ்மீர் ஆளுநர் உத்தரவு

வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை : காவல்துறையினருக்கு காஷ்மீர் ஆளுநர் உத்தரவு

webteam

ஜம்மு-காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கருணை காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை துணை ராணுவப்படை பேருந்துகள் மீது மோதவிட்டு நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தாக்குதலால் பெரும் இழப்பை சந்தித்துள்ளதால் பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதைனைதொடர்ந்து அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இணையதள சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரின் வடக்குப் பகுதியில் இணைய சேவையின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் சத்தியபால் மாலிக் ஆய்வு நடத்தினார். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.