இந்தியா

கார்த்தி சிதம்பரத்தின் 22.28 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்

webteam

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் 22.28 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளின் கீழ் விசாரணை செய்து வருகிறது. அதில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் 22.28 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய 3 நிறுவனங்களின் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது. சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் களமிறங்கியுள்ள நிலையில் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
கார்த்தி சிதம்பரம் தேவையான நேரத்தில் முடக்கத்தை நீக்க வேண்டும் என்று நீதிமன்றங்களை நாடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இது அவரின் அரசியல் நகர்வுகளை எவ்விதத்திலும் பாதிக்காது என்றே விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.