பெண்ணின் சடலம் மீட்பு pt desk
இந்தியா

கர்நாடகா: கால்வாயில் இருந்து நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை

ஓசூர் அடுத்த கர்நாடக மாநில எல்லையான சார்ஜாபுரம் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் கால்வாய் அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

ஓசூர் அடுத்த கர்நாடக மாநில எல்லையான சார்ஜாபுரம் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் கால்வாயில் இருந்து கடந்த மூன்று நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது இதையடுத்து கால்வாயில் எலி ஏதாவது இறந்திருக்கலாம் என அப்பகுதியினர் இருந்த நிலையில், துர்நாற்றம் அதிக அளவில் வீசத் தொடங்கி உள்ளது. இதனால் பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.

பெண்ணின் சடலம் மீட்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி ஊழியர்கள் கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி மேற்கொண்டனர். அப்போது அந்த கழிவுநீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நிர்வாணமாக கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளது.

இதையடுத்து சார்ஜாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் முதல் கட்ட விசாரணையில் அந்த பெண்ணை வேறு ஒரு பகுதியில் கொலை செய்து விட்டு சடலத்தை கால்வாயில் வீசிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

Police station

குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் கால்வாயில் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.