இந்தியா

கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா

கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா

webteam

கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சபாநாயகராக இருந்த ரமேஷ் குமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

முன்னதாக கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை புதிய முதலமைச்சராக பாஜ‌கவைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். இதனையடுத்து இன்று அவர் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார். இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பின் தொடக்கத்தில் பேரவையில் எடியூரப்பா உரையாற்றினார். பின்னர் தொடங்கிய நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை குரல் வாக்கெடுப்பு மூலம் பதிவு செய்தனர்.

இதில் தேவையான பெரும்பான்மையை எட்டி தன்னுடைய முதலமைச்சர் பதவியை எடியூரப்பா தக்கவைத்துக்கொண்டார்.  இந்தச் சூழலில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரான ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.