தமன்னா எக்ஸ் தளம்
இந்தியா

கர்நாடகா| 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம்.. பெற்றோர்கள் எதிர்ப்பு!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய பாடத்துக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Prakash J

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெப்பால் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடத்தில் ‘சிந்துவில் பிரிவினைக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை’ என்ற அத்தியாத்தில் நடிகை தமன்னா மற்றும் நடிகர் ரன்வீர் சிங் பற்றிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பெற்றோர்கள், ”பள்ளியில் சிந்தி சமுதாயம் (sindhi community) பற்றிய 7ஆம் வகுப்பு பாடம் உள்ளது. அதில் ஓர் அத்தியாயம், ’1947 முதல் 1962ஆம் ஆண்டுவரை பிரிவினைக்குப் பின் வாழ்க்கை: சிந்துவில் இடம்பெயர்வு, சமூகம் மற்றும் சண்டை’ என்ற தலைப்பில் உள்ளது. அவர்களின் சமூகம் மற்றும் கலாசாரத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த மாநில அரசு அனுமதித்துள்ளது.

இதையும் படிக்க:“இது ஜனநாயகத்தின் கோயில்; அரசரின் மாளிகை அல்ல” - செங்கோலை எதிர்க்கும் சமாஜ்வாடி.. கொதித்த பாஜக!

குழந்தைகளுக்கு வேறொரு சமூகத்தின் கலாசாரத்தை கற்றுக்கொடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், ஒரு நடிகை குறித்து இடம்பெற்றிருப்பது அவர்களை தவறான பாதைக்கு வழிநடத்துவதாக இருக்கும். இந்த விஷயத்தை பள்ளி நிர்வாகத்திடம் கொண்டு சென்றும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால், கர்நாடக மாநில தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு ஆணையத்திடம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளோம். அந்த அத்தியாயத்தில் சிந்தி சமூகத்தில் உள்ள வெற்றியாளர்கள் என்ற பாடத்தில் ரன்வீர் சிங் பெயரும் இடம்பெற்றுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: அதிபர் தேர்தல்|ட்ரம்ப் - பைடன் இன்று நேருக்குநேர் விவாதம்.. எதிர்பார்ப்பில் அமெரிக்க வாக்காளர்கள்!