இந்தியா

ஆபாச வீடியோ வெளியான விவகாரம் : பதவியை ராஜினாமா செய்தார் கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி

ஆபாச வீடியோ வெளியான விவகாரம் : பதவியை ராஜினாமா செய்தார் கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி

Veeramani

அரசுவேலை வாங்கித்தருவதாகக்கூறி இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படும் ஆபாச வீடியோ ஒன்று வெளியான நிலையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி இன்று தனது ராஜினாமாவை முதல்வர் எடியுரப்பாவிடம் சமர்ப்பித்தார்.

அடையாளம் தெரியாத ஒரு இளம் பெண்ணுடன் ஜர்கிஹோலி நெருக்கமாக இருக்கும் வீடியோ கிளிப்புகள் மற்றும் இருவருக்கும் இடையிலான ஆடியோ உரையாடல்கள் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகி பரபரப்பை உருவாக்கியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் தினேஷ் கலாஹள்ளி, பெங்களூருவில் உள்ள கப்பன் பார்க் போலீசில் புகார் அளித்தார், வீடியோ கிளிப்களில் உள்ள பெண்ணுக்கு அரசாங்க வேலை வாங்கித்தருவதாக அமைச்சரால் ஏமாற்றப்பட்டார் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

தான் எந்தவொரு தவறையும் செய்யவில்லை என மறுத்த ரமேஷ் ஜர்கிஹோலி தனது சகோதரர் மற்றும் பாஜக எம்.எல். பாலச்சந்திர ஜர்கிஹோலி மூலம் தார்மீக அடிப்படையில் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். "எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளன, உண்மையை நிரூபிக்க விசாரணை தேவை. நிரபராதி என்று நிரூபிக்கப்படுவேன் என எனக்கு நம்பிக்கை இருந்தாலும், நான் எனது ராஜினாமாவை தார்மீக அடிப்படையில் சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து எனது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுங்கள்என்று முதல்வர் டியுரப்பாவுக்கு ஜர்கிஹோலி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

விரைவில் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், கர்நாடக அமைச்சரின் ஆபாச வீடியோ பாஜகவுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியிருக்கிறது, இதனையடுத்து ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா செய்திருக்கிறார்.