இந்தியா

ஹெச்ஐவி பாசிட்டிவ் இளம்பெண் தற்கொலை... 23 ஏக்கர் ஏரி நீர் வெளியேற்றம்..!

ஹெச்ஐவி பாசிட்டிவ் இளம்பெண் தற்கொலை... 23 ஏக்கர் ஏரி நீர் வெளியேற்றம்..!

Rasus

கர்நாடகாவில் ஹெச்ஐவி பாசிட்டிவ் கொண்ட பெண் ஒருவர் அங்குள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பொதுமக்களின் வலியுறுத்தலின்படி 23 ஏக்கர் ஏரி நீர் முழுவதுமாக வெறியேற்றப்பட்டது.

கர்நாடாகவை சேர்ந்தவர் சுதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு ஹெச்ஐ பாசிட்டிவ் இருந்துள்ளது. இதனையடுத்து இவரை வெறுத்த இவரது கணவர், தாய் வீட்டிற்கே சுதாவை அனுப்பிவிட்டார். இந்த விவகாரம் ஊருக்கு தெரியவர சுதாவிடம் ஊர் மக்கள் யாரும் பேசுவதில்லை. ஏன் சுதாவின் தாய் கூட அவரை தொட்டு பேசுவதில்லையாம். தங்களுக்கும் ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அனைவரும் சுதாவை வெறுத்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த சுதா வீட்டின் அருகே இருந்த 23 ஏக்கர் ஏரி நீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சுதாவின் உடலில் பாதியை ஏரி மீன்கள் தின்ற நிலையில் மீதி உடல் மிதந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஏரி நீரை குடிக்க மறுத்துவிட்டனர். ஹப்பள்ளி மாவட்டத்தின் மொரப் பகுதியில் உள்ள இந்த ஏரியை கிட்டத்தட்ட 1000 மக்கள் தினசரி குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். அப்படியிருக்க குடிநீரை பயன்படுத்த மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்ததால் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எய்ட்ஸ் நோய் இவ்வாறெல்லாம் பரவாது. வேண்டுமென்றால் நீரை சோதனை செய்கிறோம் என பலதரப்பு உத்தரவாதத்தை அதிகாரிகள் கொடுத்து பார்த்தனர். ஆனால் பொதுமக்கள் அதனை ஏற்கவில்லை. ஏரியின் நீரை நீங்களாவே வெளியேற்றி விடுங்கள். இல்லையென்றால் நாங்கள் வெளியேற்ற வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தனர் கிராம மக்கள். இதனையடுத்து மக்களின் வலியுறுத்தலின்பேடி 23 ஏக்கர் ஏரி நீர் மோட்டார் பம்புகள் கொண்டு முழுமையாக வெளியேற்றப்பட்டது. அத்துடன் மலப்பிரபா கால்வாயில் இருந்து புதிய நீர் கொண்டுவரப்பட்டு ஏரியில் நிரப்பப்பட்டது.