இந்தியா

கர்நாடக சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்றது மதமாற்ற தடை சட்டம்

கர்நாடக சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்றது மதமாற்ற தடை சட்டம்

நிவேதா ஜெகராஜா

மதமாற்றத்திற்கு தடை விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்தத்திற்கு கர்நாடக சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் இம்மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறிய நிலையில், அடுத்து சட்டமேலவையின் ஒப்புதலுக்கு அம்மசோதா அனுப்பப்பட உள்ளது. இதன் பின் ஆளுநரின் ஒப்புதலுடன் இம்மசோதா சட்டமாக மாறும். இதன்மூலம் இந்தியாவில் மதமாற்றத்திற்கு தடை விதிக்க சட்டம் இயற்றிய 9ஆவது மாநிலமாகிறது கர்நாடகா.

காங்கிரஸ் கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா இதற்கு கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் “கர்நாடக அரசு இயற்றியுள்ள இச்சட்டம், அரசமைப்பு சாசனத்திற்கும் மனித உரிமைக்கும் எதிரானது. மதமாற்ற தடைசட்டம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மறைமுக செயல்திட்டங்களில் ஒன்று” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “இம்மசோதாவுக்கான வரைவு மசோதா, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது” என தெரிவித்துள்ளார்.