இந்தியா

கர்நாடகா தேர்தல்: கிங் மேக்கராக மாறுமா மதசார்பற்ற ஜனதா தளம் ?

கர்நாடகா தேர்தல்: கிங் மேக்கராக மாறுமா மதசார்பற்ற ஜனதா தளம் ?

webteam

கர்நாடக சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் 42 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் அந்தக் கட்சி, கிங் மேக்கராக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாயின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கு இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. முன்னணி நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறது.

 9.50  மணி நிலவரப்படி பாஜக 95 இடங்களிலும் காங்கிரஸ் 77 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 42 இடங்களிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. இதனால் தொங்கு சட்டசபைதான் உருவாகும் என தெரிகிறது.

இந்நிலையில் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சி இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தக் கட்சியின் ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாது என்கிற நிலை உருவாகியுள்ளது. அந்தக் கட்சி யாருக்கு ஆதரவளிக்கிறதோ அந்தக் கட்சிதான் ஆட்சியமைக்கும் என்பதால் அது, கிங் மேக்கராக உருவெடுத்துள்ளது.