கர்நாடக சட்டமன்ற மேலவையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி - நேரத்தில், பாஜக உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, “பெங்களூரு, பெலகாவி, மாண்டியா, மைசூரு உட்பட பல நகரங்களுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய
மட்டுமே, மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அணை முழுக்க முழுக்க கர்நாடக எல்லைக்குள் உள்ள பகுதியில் அமைகிறது. இதில் தமிழகத்திற்கு ஒரு துளி கூட பாதிப்பு இல்லை. மாறாக தமிழகத்திற்குதான் பயனாக உள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் செய்வதற்காகவே, திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்“ என்று குற்றம்சாட்டினார்.