இந்தியா

கர்நாடகா: போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி; இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கர்நாடகா: போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி; இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

JustinDurai

கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்றுமுதல் கூடுதலாக ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

கா்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், வடகிழக்கு, வடமேற்கு கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்கள், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றின் ஊழியா்கள் தங்களை அரசு ஊழியா்களாகத் தரம் உயர்த்த வேண்டும்; 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் முதல்நாள் போராட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்தால் நிலைமை மோசமாகும் எனத் தெரிகிறது. இந்நிலையில் வரும் 13-ம் தேதி கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினமான 'யுகாதி பண்டிகை கொண்டாடவிருப்பதால், நெருக்கடியை சமாளிக்க இன்று (ஏப்ரல் 8) முதல் ஏப்ரல் 14 வரை கூடுதல் ரயில்களை இயக்கவுள்ளதாக தென்மேற்கு ரயில்வே  அறிவித்துள்ளது. 

மேலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஊழியா்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். இல்லையெனில் 'எஸ்மா' சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.