மோசமான வானிலை காரணமாக கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பயணம் ரத்தாகியுள்ளது.
1999-ஆம் ஆண்டு, கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினரை விரட்டியடித்ததன் 22-வது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி லடாக்கின் த்ராஸ் பகுதியில் இன்று நடைபெறும் கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் லடாக் த்ராஸ் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்கில் போர் நினைவுச்சின்னத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மலர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் லடாக் துணைநிலை ஆளுநர் ஆர்.கே.மாத்தூர் மற்றும் லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் ஆகியோர் கலந்து கொண்டனர்.