இந்தியா

இந்தியக் கடற்படையின் அடுத்த தளபதியாக கரம்பிர் சிங் நியமனம்

webteam

துணை அட்மிரல் கரம்பிர் சிங் இந்தியக் கடற்படையின் அடுத்த தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியக் கடற்படையின் தளபதியாக சுனில் லன்பா பதவி வகித்து வருகிறார். அவரது பதவி காலம் வருகிற மே 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அட்மிரல் சுலின் லன்பாவுக்குப் பிறகு, கரம்பிர் சிங் நியமனம் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துணை அட்மிரல் கரம்பிர் சிங், தற்போது கடற்படையின் துணைத் தளபதியாக செயல்பட்டு வருகிறார். இவர் இந்தியாவின் மிக பெரிய மற்றும் முதல் கப்பற்படை தளம் எனப் பெயர் பெற்ற விசாகப்பட்டினத்திலுள்ள கிழக்கு கடற்படையின் தலைவராக இருந்து வருகிறார்.

டில்லியிலுள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் படித்த கரம்பிர் சிங், 1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம், கடற்படையில் தனது சேவையை ஆரம்பித்தார். 1982 ஆம் ஆண்டு, ஹெலிகாப்டர் பைலட்டாக அவர் பதவி உயர்வு பெற்றார். நீலகிரி மாவட்டத்திலுள்ள ராணுவ கல்லூரி மற்றும் கரஞ்சாவிலுள்ள தேசிய போர் பயிற்சி கல்லூரியில் படித்து அதே அமைப்புகள் சில காலம் பணியாற்றியுள்ளார். 

இந்தியக் கடலோர காவல்படைக்கு சொந்தமான சாந்த்பிபி, ஏவுகணை தாங்கி கப்பலான விஜய்துர்க் ஆகியவற்றின் தளபதியாகவும் இருந்துள்ளார். அதிசிறந்த சேவைக்கான பதக்கத்தை குடியரசுத்தலைவரிடம் இருந்து இவர் பெற்றுள்ளார்.