கனிமொழி எம்.பி pt web
இந்தியா

“மிகப்பெரிய மாற்றம் வரும்; ஆனால், இது பாஜகவின் கண் துடைப்பு மாதிரி இருக்கிறது” திமுக எம்.பி. கனிமொழி

PT WEB

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மக்களவையில் முதல் அலுவலக நேரத்தில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேஹ்வால் அறிமுகம் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், பாரத ராஷ்டீரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் மசோதா சிக்கலின்றி நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, நாளை மறுநாள் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் முதல் மசோதாவாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து திமுக எம்.பி. கனிமொழி புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், கண் துடைப்புக்காகவே மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என விமர்சனம் செய்துள்ளார். அவரது முழு பேட்டி செய்தியில் இணைக்கப்பட்டுள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.