இந்தியா

கத்தார் ஏர்வேஸ் தலைவரை பகடி செய்த வீடியோவை பகிர்ந்து கேலிக்கு உள்ளான கங்கனா ரனாவத்!

கத்தார் ஏர்வேஸ் தலைவரை பகடி செய்த வீடியோவை பகிர்ந்து கேலிக்கு உள்ளான கங்கனா ரனாவத்!

ச. முத்துகிருஷ்ணன்

கத்தார் ஏர்வேஸ் தலைவரை பகடி செய்த வீடியோவை “இந்தக் கொடுமைக்காரனை உற்சாகப்படுத்தாதீர்கள்” என்ற தலைப்பிட்டு பகிர்ந்து நடிகை கங்கனா ரனாவத் கேலிக்கு உள்ளான சம்பவம் அரங்கேறியுள்ளது.

தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களால் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த நடிகை கங்கனா ரனாவத், கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேக்கரை "ஒரு மனிதனின் முட்டாள்" என்று பகடி செய்யப்பட்ட வீடியோ கிளிப்பை பகிர்ந்து மீண்டும் கேலிக்கு ஆளாகியுள்ளார். இரண்டு பாஜக தலைவர்கள் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக கத்தார் ஏர்வேஸைப் புறக்கணிக்குமாறு இந்தியர்களிடம் வேண்டுகோள் விடுத்த "வாசுதேவ்" என்ற ட்விட்டர் பயனருக்கு பதிலளிக்கும் வகையில் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்த வீடியோ கிளிப்பில், வாசுதேவ், “இந்து தெய்வங்களின் நிர்வாண படங்களை வரைந்த எம்.எஃப் ஹுசைனுக்கு கத்தார் அடைக்கலம் கொடுத்தது. இதே கத்தார் தான் நூபுர் ஷர்மாவின் கருத்துகளைப் பற்றி விமர்சனம் செய்கிறது. கத்தார் மற்றும் கத்தார் ஏர்வேஸின் தயாரிப்புகளைப் புறக்கணிக்குமாறு பார்வையாளர்களை வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருந்தார்.

மற்றொரு ட்விட்டர் பயனர் பின்னர் கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேக்கரின் நேர்காணலை டப்பிங் செய்து ஒரு ஏமாற்று வீடியோவை வெளியிட்டார். கிண்டல் கேலியுடன், டப்பிங் செய்யப்பட்ட அந்த வீடியோவில் அக்பர் அல் பேக்கர் “வாசுதேவ் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர் ₹ 624.50 முதலீட்டில் இருக்கிறார். இனி எப்படி இயக்குவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எல்லா விமானங்களையும் நிறுத்திவிட்டோம். எங்கள் செயல்பாடுகள் இனி இயங்காது. இந்த புறக்கணிப்பு அழைப்பை வாசுதேவ் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறுவது போல எடிட் செய்யப்பட்டது.

பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை கங்கனா ரனாவத் இந்த பகடி வீடியோவை உண்மை என்று நம்பி, “இந்தக் கொடுமைக்காரனை உற்சாகப்படுத்தாதீர்கள்” என்று தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாவில் வைரலான இந்த பதிவு கடும் கேலி, கிண்டலுக்கு ஆளானதை அடுத்து அந்த பதிவை கங்கனா நீக்கியுள்ளார்.