மகாராஷ்டிரா To டெல்லி முகநூல்
இந்தியா

மகாராஷ்டிரா To டெல்லி | வெங்காயத்தை மட்டுமே ஏற்றிக்கொண்டு ஒரு ரயில்!

மகாராஷ்டிராவிலிருந்து டெல்லிக்கு வெங்காயத்தை மட்டுமே ஏற்றிக்கொண்டு ஒரு ரயில் சென்று சேர்ந்துள்ளது.

PT WEB

மகாராஷ்டிராவிலிருந்து டெல்லிக்கு வெங்காயத்தை மட்டுமே ஏற்றிக்கொண்டு ஒரு ரயில் சென்று சேர்ந்துள்ளது. அது ஏன் என்பதுபற்றி பார்க்கலாம்...

டெல்லியில் வெங்காயம் ஒரு கிலோ 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி நெருங்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து KANDA விரைவு ரயில் மூலம் டெல்லிக்கு வெங்காயம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் 42 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 1,600 டன் வெங்காயம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால், எனவே வரும் நாட்களில் டெல்லி மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கும் என நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் நிதி காரே தெரிவித்துள்ளார். இதேபோல, அசாம், நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வெங்காயம் கொண்டு செல்லப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.