இந்தியா

ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்புக்குப் பின் கம்பல தடை குறித்து பரிசீலனை

ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்புக்குப் பின் கம்பல தடை குறித்து பரிசீலனை

webteam

ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் கம்பல போட்டிகள் மீதான தடை குறித்து பரிசீலிக்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டினைப் போல கர்நாடகாவில் கம்பல எனும் எருதுப் போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை விலக்க வேண்டும் என்று கர்நாடகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், இது குறித்த வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜி தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் கம்பல போட்டிகளுக்கான தடை குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அந்த வழக்கின் தீர்ப்பு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.