இந்தியா

தலைமை நீதிபதி விவகாரம் - விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்

தலைமை நீதிபதி விவகாரம் - விசாரணை குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்

rajakannan

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார். 

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை பாலியல் புகாரில் சிக்க வைக்க சதி நடந்ததா என்பது குறித்து விசாரிக்க நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் ரமணாவும் இடம்பெற்றிருந்தனர்.

இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த உள்ள நீதிபதி ஏ.கே.பட்நாயக்குக்கு சிபிஐ, உளவுத்துறை, டெ‌ல்லி காவல்துறை ஒத்துழைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் நீதிபதி ஏ.கே.பட்நாயக் குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பெண் ஒருவர் கூறிய‌ பாலியல் புகார் குறித்து விசாரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி ஏ.கே.பட்நாயக் குழு தனது விசாரணையை முடித்த பின் அதற்கான அறிக்கையை சீல் இடப்பட்ட உறையில் வைத்து வழங்கும்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், தலைமை நீதிபதிக்கு தான் மிகவும் நெருங்கிய நண்பர் என்றும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் என்பதுபோல் இருப்பதாகவும் அதனால், குழுவில் இடம்பெறுவது சரியாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.