இந்தியா

டெல்லியில் குவியும் உதவி - களத்தில் நீதிபதி குரியன் ஜோசப்

டெல்லியில் குவியும் உதவி - களத்தில் நீதிபதி குரியன் ஜோசப்

webteam

டெல்லியில் உள்ள கேரள மக்கள் சார்பில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற வாசலில் அமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு மையத்தில் பொருட்கள் கொடுக்கலாம் என கூறப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இரவு 12 மணி வரை மக்கள் கொடுக்கலாம் என்ற அறிவிப்போடு பொருட்களை பெற்று வருகின்றனர். 

மாலை 6 மணி முதல் பொருட்கள் வாங்கப்பட்டு வரும் நிலையில் 6 மணிக்கே முதல் ஆளாக வந்தவர் நீதிபதி குரியன் ஜோசப். ஏகப்பட்ட நிவாரண பொருட்களை கொண்டு வந்த அவர், தன்னார்வலர்களோடு தன்னை இணைத்து கொண்டார். மக்கள் கொண்டு வரும் பொருட்களை வாங்குவது , அவற்றை பேக் செய்வது என வேலைகளை அவரே செய்து வருகிறார். அனைவருக்கும் இது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

பலருக்கும் போன் செய்து உதவுமாறும் கேட்டுக் கொண்டே இருக்கும் குரியன் ஜோசப், பொருட்களை பிரித்து பேக் செய்யும் வேலையை கேட்டுப் பெற்று செய்து வருகிறார். தன்னார்வலர்களை பாராட்டிய நீதிபதி, பணி முடியும் வரை தான் உடன் இருப்பதாக கூறி, அவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்