இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் மிஸ்ரா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் மிஸ்ரா

webteam

உச்சநீதிமன்றத்தின் 45ஆவது தலைமை நீதிபதியாக தீபக் மிஷ்ரா பதவியேற்றார். 

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் நேற்றுடன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 45வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றார். பிரதமர் முன்னிலையில், தீபக் மிஸ்ராவுக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லி, பாட்னா ஆகிய உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய தீபக் மிஸ்ரா, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் போது நிர்பயா, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். நாட்டை உ‌லுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு, மும்பை தாக்குதல் வழக்கு உள்ளிட்டவற்றில் தீபக் மிஸ்ராவின் தீர்ப்புகள் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.‌