இந்தியா

இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்படுகின்றனவா யானைகள்..?

இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்படுகின்றனவா யானைகள்..?

Rasus

கேரளாவில் தொடர்ச்சியாக ஏற்படும் யானைகளின் இறப்பு வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காப்பீட்டு பணத்திற்காக யானைகள் கொல்லப்படுகின்றனவா என்ற சந்தேகமும் எழுகிறது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றின் யானை கடந்த செப்படம்பர் மாதம் உயிரிழந்தது. இந்த யானையின் உயிரிழப்பு அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே யானை உயிரிழக்கும்போது அதன் உடல்பாகத்தில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. யானைக்கு பிரதேச பரிசோதனையும் செய்யப்பட்ட நிலையில் காயங்களை முறையாக மருந்துகள் வைத்து பராமரிக்காமல் விட்டதே யானை உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்தது.  யானை உடலில் காயங்களை ஏற்படுத்தியதும் தெரியவர யானையின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை மட்டுமே மொத்தமாக 18 வளர்ப்பு யானைகள் உயிரிழந்துள்ளன. அதில் பெரும்பாலான யானைகள் அவை உயிருடன் இருக்கும்போது கவனிக்க தவறியதால்தான் உயிரிழந்தது தெரியவந்தது. இதனிடையே யானைகள் இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்படுகின்றனவா என்ற சந்தேகமும் நிலவுகிறது. இந்நிலையில் வளர்ப்பு யானைகள் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள கேரள வனத்துறை உயர் மட்ட குழுவை அமைத்துள்ளது.

யானைகள் உயிரிழக்கும்பட்சத்தில் யானையின் உரிமையாளர் அதுகுறித்து மாவட்ட வன அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வன அதிகாரிகள் யானைக்கு பிரேத பரிசோதனையை மேற்கொள்வார். அதன்மூலம் யானையின் உயிரிழப்புக்காக உண்மை நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் யானைகளுக்கு பல்வேறு வனையான இன்சூரன்ஸ் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. நியூஸ் மினிட் இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.