இந்தியா

2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடத் தடை தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும்: நீதிபதி கிருபாகரன்

webteam

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்க கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு மேற்கண்டவாறு அறிவுறுத்தியுள்ளார். அதில், சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்க, இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என்றும், 3 முதல் 5 வகுப்பு வரை நான்கு பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளதை பின்பற்ற வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் இது சம்பந்தமாக கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், எந்த மாநில அரசும் இதுவரை பதிலளிக்கவில்லை என மத்திய அரசு தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் அந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.