இந்தியா

மாணவர்களைவிட இந்தியாவில் பசுக்களுக்குதான் பாதுகாப்பு அதிகம் : டிவிங்கிள் கண்ணா

மாணவர்களைவிட இந்தியாவில் பசுக்களுக்குதான் பாதுகாப்பு அதிகம் : டிவிங்கிள் கண்ணா

rajakannan

ஜேஎன்யு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாலிவுட் நடிகையும் அக்‌ஷய் குமாரின் மனைவியுமான ட்விங்கிள் கண்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நேற்று கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜேஎன்யுவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாலிவுட் நடிகை ட்விங்கிள் கண்ண ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியாவில் மாணவர்களை விட பசுக்களுக்குதான் பாதுகாப்பு அதிகம் உள்ளது போல் தெரிகிறது. ஆனால், இதனை நாடு ஏற்க மறுக்கிறது. வன்முறையை கொண்டு நீங்கள் மக்களை ஒடுக்க முடியாது. அப்படி செய்தால், மேலும் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் வெடிக்கும். மக்கள் தெருவில் இறங்குவார்கள். தலைப்பு செய்தி இதனையே சொல்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.