இந்தியா

82 மாணவர்கள் எந்த நாடென்றே தெரியவில்லை - அதிர்ச்சி அளித்த ஜேஎன்யூ!

82 மாணவர்கள் எந்த நாடென்றே தெரியவில்லை - அதிர்ச்சி அளித்த ஜேஎன்யூ!

webteam

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 301 வெளிநாட்டு மாணவர்களில் 82 மாணவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் நிர்வாகத்திடம் இல்லை என தெரியவந்திருக்கிறது.

விடுதிக் கட்டண உயர்வு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு என பல்வேறு போராட்டங்களால் ஜேஎன்யூ பல்கலைக்கழகம் சமீபத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில் அங்கு படிக்கும் சில மாணவர்கள் எந்த தேசத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் அந்த நிர்வாகத்திடம் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் எத்தனை வெளிநாட்டு மாணவர்கள் பயில்கிறார்கள், அவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை தரும்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம், கொரியா, நேபாளம், சீனா, ஆப்கானிஸ்தான், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சிரியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் படித்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் பல்கலைக்கழகத்தில் 301 வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருவதாகவும், அவர்களில் 82 பேர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் தங்களிடம் இல்லை என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.