பிரதமர் மோடியால் மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘எமினன்ஸ்’ பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட, ஜியோ இன்ஸ்டியூட் இந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.
ரிலையன்ஸ் அறக்கட்டளையால் நவி மும்பையில் உருவாக்கப்பட்டுவரும் பல்கலைக்கழகமான, ஜியோ இன்ஸ்டியூட் இந்த ஆண்டுக்குள் தனது செயல்பாட்டை தொடங்க வாய்ப்புள்ளது, நரேந்திர மோடி அரசாங்கத்தால் புகழ்பெற்ற ”எமினன்ஸ்” நிறுவனமாக (ஐஓஇ) அறிவிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்பல்கலைக்கழகம் இந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வருகிறது.
ஜியோவுக்கு 2018 ஆம் ஆண்டில் ‘கிரீன்ஃபீல்ட்’ பிரிவின் கீழ் ஐஓஇ அந்தஸ்து வழங்கப்பட்டது, இது இன்னும் புதிய அல்லது முன்மொழியப்பட்ட நிறுவனங்களுக்கானது, மேலும் ஜூலை 2021 க்குள் அரசுக்கு தயார்நிலை அறிக்கையை சமர்ப்பிக்க ஜியோவுக்கு அவகாசமும் வழங்கப்பட்டது.
கல்வி அமைச்சகத்தின் தகவல்களின்படி, டிசம்பர் 7, 2020 அன்று ஜியோ இன்ஸ்டிடியூட்டின் தயார்நிலை அறிக்கை பெறப்பட்டது. தயார்நிலை அறிக்கை டிசம்பர் 9 அன்று பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு பிரிவு 8.4 இன் படி அனுப்பப்பட்டது. மேலும், நிறுவனத்தின் தயார்நிலையை மதிப்பிடுவதற்கான நேரடி ஆய்வு 2021 ஜனவரி 22-23 தேதிகளில் நடத்தப்பட்டது. தற்போது நிபுணர் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் (இஇசி) அறிக்கைக்காக காத்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டது.