ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் உள்ளது. இதன் பதவிக்காலம் விரைவில் நிறைவுபெறுவதையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டம் கடந்த நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. எஞ்சிய தொகுதிகளுக்கு 2வது கட்டமாக இன்று நடைபெற்றது. அதன்படி, மொத்தமுள்ள 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட்டில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே ஆரம்பம் முதலே போட்டி நிலவியது.
இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி ஜார்க்கண்டில், இந்த முறை பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும் எனப் பல கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை.
சி.என்.என்.
பாஜக கூட்டணி 45
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 33
மற்ற கட்சிகள் 3
பீப்பிள்ஸ் பல்ஸ்
பாஜக கூட்டணி 44-53
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 25-37
மற்ற கட்சிகள் 5-9
மேட்ரிஸ்
பாஜக கூட்டணி 42-47
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 25-30
மற்ற கட்சிகள் 1-4
ஜேவிசி எக்ஸிட்
பாஜக கூட்டணி 40-44
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 30-40
மற்ற கட்சிகள் 0-1
டைம்ஸ் நவ்
பாஜக கூட்டணி 40-44
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 30-40
மற்ற கட்சிகள் 0-1
பி-மார்க்
பாஜக கூட்டணி 31-40
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 37-47
ஆக்ஸிஸ் மை இந்தியா
பாஜக கூட்டணி 25
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 53
மற்ற கட்சிகள் 3
டைனிக் பாஸ்கர்
பாஜக கூட்டணி 37-40
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 36-39
மற்ற கட்சிகள் 0-2