இந்தியா

ஜெய்ஷ் பயங்கரவாதி டெல்லியில் கைது!

webteam

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயங்கரவாதி சஜ்ஜத் கானை டெல்லி போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட் டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானப்படை, பால்கோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது குண்டு வீசியது.

அதற்கு பிறகு எல்லையில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. காஷ்மீர் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படை, பயங்கரவாதிகளைத் தேடி  வேட்டையாடி வருகிறது. தினமும் அங்கு மோதல் நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி முடாசீர் என்பவனை இந்த மாத தொடக்கத்தில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். அவனின் நெருங்கிய கூட்டாளியான பயங்கரவாதி சஜ்ஜத் கான். இவனும் புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவாக  செயல்பட்டுள்ளான்.  இவனை, டெல்லி செங்கோட்டை அருகே சிறப்ப்புப்படை போலீசார், நேற்றிரவு கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.