உமர் அப்துல்லா pt web
இந்தியா

மாநில அந்தஸ்தை கோரும் உமர் அப்துல்லா.. கடுமையாக சாடும் எதிர்க்கட்சிகள்.. காரணம் என்ன?

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோராமல் மாநில அந்தஸ்தை மட்டும் கோரியுள்ளது மூலம் மத்திய அரசிடம் உமர் அப்துல்லா அரசு சரணாகதி அடைந்துள்ளதாக எதிரக்கட்சிகள் சாடியுள்ளன.

PT WEB

காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றுள்ள நிலையில் அம்மாநில அமைச்சரவை கூடி மாநில அந்தஸ்தை மீண்டும் கோரி தீர்மானம் இயற்றியது. காஷ்மீருக்கு 370 சட்டப்பிரிவு மூலம் அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்போம் என தேர்தல் பரப்புரையில் உறுதியளித்த உமர் அப்துல்லா தற்போது அது குறித்து மவுனம் சாதிப்பதாக மக்கள் ஜனநாயக கட்சி சாடியுள்ளது.

மக்கள் மாநாடு கட்சி, அவாமி இத்திஹாத் கட்சி உள்ளிட்டவையும் ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையின் முதல் தீர்மானத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.