ஜம்மு-காஷ்மீர் எக்ஸ் தளம்
இந்தியா

ஜம்மு காஷ்மீர் | 5 எம்.எல்.ஏக்களை துணை நிலை ஆளுநர் நியமிக்கும் அதிகாரம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஜம்மு காஷ்மீரில் 5 எம்.எல்.ஏக்களை துணை நிலை ஆளுநர் நியமிக்கலாம் என்ற அதிகாரத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

PT WEB

ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்ட சபை அமைய வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநருக்கு எம்.எல்.ஏக்களை நியமிக்க உள்ள அதிகாரத்தை அங்குள்ள கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

துணை நிலை ஆளுநரால் நியமிக்கப்படும் எம்.எல். ஏக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள அதே அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Jammu Kashmir Governor

எனவே இன்றைய ஓட்டு எண்ணிக்கையில் ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பதில் கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டால், துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தான் நியமிக்கும் 5 எம்.எல்.ஏக்களின் துணை கொண்டு ஆட்சியை அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார். ஏற்கனவே காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன துணை நிலை ஆளுநருக்கு 5 எம்.எல்.ஏ. க்கள் நியமிக்கும் அதிகாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.