ஜம்மு - காஷ்மீர் புதிய தலைமுறை
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் | இறுதிக்கட்ட தேர்தல்.. 65.48 சதவிகிதம் வாக்குப்பதிவு - அரியணை யாருக்கு?

ஜம்மு, காஷ்மீரில் 3 ஆவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. 5 மணி நிலவரப்படி 65.48 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

Prakash J

ஜம்மு காஷ்மீரில் 7 மாவட்டங்களில் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 ஆவது மற்றும் இறுதிகட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 2019 ஆகஸ்ட் மாதம் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத்தேர்தல் உற்று நோக்கப்படுகிறது.

இறுதிகட்டத் தேர்தல் நடைபெற்ற 40 தொகுதிகளில் 415 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முன்னாள் துணை முதலமைச்சர்கள் Tara Chand மற்றும் Muzaffar Baig, முன்னாள் அமைச்சர்கள் பலரும் களத்தில்உள்ளனர். 3 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 8 ஆம்தேதி எண்ணப்படுகின்றன. இதுகுறித்த முழுச் செய்திகளையும் அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.

இதையும் படிக்க: உடலுறவுக்குப் பின் வெளியேறிய ரத்தப்போக்கு.. இணையத்தில் தகவல் தேடிய காதலர்.. காதலிக்கு நேர்ந்த சோகம்!