இந்தியா

காஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்

காஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்

Rasus

காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீதான தாக்குதலின் ஈரம் காயாத நிலையில், நடத்தப்பட்ட மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாது‌காப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர், முதலமைச்சர்கள், எதிர்கட்சித்தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீதான தாக்குதலின் ஈரம் காயாத நிலையில், காஷ்மீரில் நடத்தப்பட்ட மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள நவ்ஷெரா பகுதியில் இந்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது புதிதாக தோண்டப்பட்டிருந்த ஒரு குழியில் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ராணுவ மேஜர் சித்ரேஷ் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த வீரர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்திய பகுதியில் இச்சம்வம் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் புகுந்து சக்திவாய்ந்த வெடிகுண்டை புதைத்து வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.