இந்தியா

ஜேட்லிக்கு கூடுதலாக பாதுகாப்பு துறை ஒதுக்கீடு

ஜேட்லிக்கு கூடுதலாக பாதுகாப்பு துறை ஒதுக்கீடு

webteam

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்பு துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறை அமைச்சர் பொறுப்பை வகித்த மனோகர் பாரிக்கர் , கோவா முதலமைச்சராக தேர்வாகியுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி நிதித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அருண் ஜேட்லி, இனி கூடுதலாக பாதுகாப்பு துறையையும் கவனிப்பார். சமீபத்தில் கோவா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியதை அடுத்து, பாஜக ஆட்சி அமைக்க முயற்சி எடுத்தது. இதன் ஒரு பகுதியாக மனோகர் பாரிக்கார் கோவா மாநில முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, மனோகர் பாரிக்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். கோவா முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் நாளை பதவியேற்கிறார்.