இந்தியா

"சி.பி.ஐ வழக்கை எளிதாக நடத்தவே ஜெகன்மோகன் பிரதமரை சந்தித்தார்"- சந்திரபாபு நாயுடு!

"சி.பி.ஐ வழக்கை எளிதாக நடத்தவே ஜெகன்மோகன் பிரதமரை சந்தித்தார்"- சந்திரபாபு நாயுடு!

sharpana

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்ததை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 175 தொகுதிகளில் 151 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார் ஜெகன் மோகன் ரெட்டி. அப்போது, ஆளும் கட்சியாக இருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 23 தொகுதிகளையும் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 1 தொகுதியையும் பிடித்தது.

இந்நிலையில், சமீபத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் ஜெகன்மோகன் ரெட்டி. அதற்குள், தற்போது பிரதமர் மோடியையும் சந்தித்திருப்பதால் ’தன்மீதுள்ள சி.பி.ஐ வழக்குகளை எளிதில் நடத்துவதற்காகவும் தனக்கு சாதகமாக மாற்றுவதற்காகவும் கூட்டணி ஒப்பந்தம் போடவே ஜெகன்மோகன் ரெட்டி பிரதமரை சந்தித்துள்ளார்’ என்று குற்றம்சாட்டியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

ஏற்கெனவே, பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனாவும் சிரோமணி அகாலிதளம் கட்சியும் வெளியேறியுள்ளதால், பாஜக மாநிலக் கட்சிகளை கூட்டணியில் இணைக்க முயற்சித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.