இந்தியா

ஆந்திர முதல் அமைச்சராக பொறுப்பேற்றார் ஜெகன்மோகன்!

webteam

ஆந்திர முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். 

இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், 5 பேரை துணை முதலமைச்சர்களாக தேர்ந்தெடுக்கவும் 25 கேபினேட் அமைச்சர்களையும் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. இவர்களின் பதவிக்காலம் 30 மாதங்கள் என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 துணை முதலமைச்சர்களும் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள். ஆட்சியிலும், கட்சியிலும் அனைவரும் சமம் என்பதை காண்பிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெகன் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசு திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேரவே 5 துணை முதல்வர்கள் தேர்ந்தெடுத்ததாகவும் ஜெகன் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, அங்கு வைக்கப்பட்டு ள்ள தனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் உருவப்படத்தை வணங்கினார்.  முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு தலைமை செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தனர்.