இந்தியா

காஷ்மீரிலிருந்து அமர்நாத் யாத்ரீகர்கள் வெளியேற உத்தரவு  

காஷ்மீரிலிருந்து அமர்நாத் யாத்ரீகர்கள் வெளியேற உத்தரவு  

webteam

அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரிலிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளனர் என்று உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனே வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவுறுத்தலை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பிறப்பித்துள்ளது. 

ஏற்கனவே அமர்நாத் யாத்திரை மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கூடுதல் படைவீரர்கள் கஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டத்தையும் கவனத்தில் கொண்டே காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதால் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதட்டம் அதிகரித்துள்ளது. அத்துடன் தீவிரவாதத் தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரித்திருப்பதால் மேலும் பாதுகாப்பு அதிகரிப்பது மற்றும் காஷ்மீர் யாத்ரீகர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்ப அறிவுரை வழங்கியுள்ளது ஆளுனர் ஆட்சியின் கீழுள்ள ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம்.