இந்தியா

காஷ்மீரில் நிறுத்தப்பட்டிருந்த பூஞ்ச்- ராவல்கோட் பேருந்து சேவை தொடக்கம்!

காஷ்மீரில் நிறுத்தப்பட்டிருந்த பூஞ்ச்- ராவல்கோட் பேருந்து சேவை தொடக்கம்!

webteam

புல்வாமா தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த காஷ்மீரின் பூஞ்ச்- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட் இடையிலான போக்குவரத்து சேவை, இன்று மீண்டும் தொடங்கியது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இக்கொடூர தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ் தானுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்த தாக்குதல் காரணமாக காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட் இடையிலான பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

இதுபற்றி போக்குவரத்து அதிகாரி ஜஹாங்கிர் கான் கூறும்போது, ‘’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வந்த பேருந்தில் 8 பயணிகள் வந்தார்கள். இங்கிருந்து 2 பயணிகள் அங்கு சென்றுள்ளனர்’’ என்றார்.