இந்தியா

தவறான பரப்புரை : அமித்ஷா இயக்குநராக உள்ள வங்கி சர்ச்சைக்கு ஜவடேகர் பதிலடி

webteam

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் செல்லாத நோட்டுகள் அதிக அளவில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய்யான , தவறான பரப்புரை என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஐஐடியில் நடைபெற்ற விழா ஒன்றில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். அதில் இது தொடர்பாக செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த ஜவடேகர், இது ஒரு தவறான பரப்புரை என்றும் விளக்களித்தார். முன்னதாக  மனோரஞ்சன் எஸ்.ராய்  என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது எந்தெந்த வங்கியில் எவ்வளவு பணம் டெப்பாசிட் செய்யப்பட்டது என்பது குறித்த தகவல்களை கோரியிருந்தார். இதற்கு நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் சரவணவேல் பதிலளித்துள்ளார். அதில் மிக அதிகபட்சமாக குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ.745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக தகவல் கொடுக்கப்பட்டது.