இந்தியா

“வாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு முழுக்கு போட்டுவிட்டு சிக்னல்-க்கு மாறும் நேரம்இது” : பேடிஎம்

“வாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு முழுக்கு போட்டுவிட்டு சிக்னல்-க்கு மாறும் நேரம்இது” : பேடிஎம்

EllusamyKarthik

“வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு முழுக்கு போட்டுவிட்டு சிக்னலுக்கு மாறவேண்டிய நேரம் இது” என்று பேடிஎம்(Paytm) சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர உள்ளது. விவரங்களை கொடுக்காத பயனர்களின் செயல்பாடு வரும் பிப்ரவரி 8 ஆம் தேதியோடு முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு முழுக்கு போட்டுவிட்டு சிக்னலுக்கு மாறவேண்டிய நேரம் இது தான் என ட்வீட் செய்துள்ளார் Paytm நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மா.

“அவர்கள் சொல்கிறார்கள் மார்கெட்டிற்கு பவர் உள்ளது என்று. நாம் தான் உலகின் மிகப்பெரிய மார்க்கெட். இந்தியாவில் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனம் அவர்களது ஏகபோக தனியுரிமையை பயன்படுத்தி மில்லியன் கணக்கான பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை எடுத்து கொள்ளும் துஷ்பிரயோகம் செய்கின்றனர். நாம் இப்போதே சிக்னலுக்கு மாறியாக வேண்டும். இந்த மாதிரியான நகர்வுகளுக்கு மறுப்பு சொல்வதும், அதற்கு பலிகடா ஆவதும் நம் கைகளில் தான் உள்ளன” என அவர் சொல்லியுள்ளார். 

முன்னதாக உலகின் நெம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்கும் சிக்னல் அப்ளிகேஷனை பயன்படுத்துமாறு ட்வீட் செய்திருந்தார். உலகம் முழுவதும் பலரும் இப்போது சிக்னல் அப்ளிகேஷனை அவரவர் செல்போன்களில் இன்ஸ்டால் செய்து வருகின்றனர்.