இந்தியா

கொரோனா சிகிச்சை கட்டணம்: ரூ.2 லட்சம் வரை ரொக்கமாக செலுத்த மத்திய அரசு அனுமதி

நிவேதா ஜெகராஜா

கொரோனாவுக்காக தனியார் மருத்துவமனைகள், டிஸ்பென்சரிகள், நர்ஸிங் ஹோம்கள், கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நபர்கள், இரண்டு லட்சம் வரை ரொக்க பணம் வசூலிக்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மோசமாக இருந்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல இடங்களில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் தொகை மிக அதிகமாக இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கான சிகிச்சை கட்டண வசூலிப்பு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் வந்துக்கொண்டு வருகிறது.

அப்படியான ஒரு அறிவிப்பாக, இன்று மத்திய அரசின் வருமான வரித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிகிச்சைக்கான கட்டணத்தில் இரண்டு லட்சம் வரையிலான தொகையை, ரொக்க பணமாக வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. 2 லட்சத்துக்கும் அதிகமான கட்டணமாக இருந்தால்மட்டும், நோயாளிகள் அதை ஆன்லைனில் செலுத்தலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இப்போதுவரை பல தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு குறைந்த தொகையாக இருந்தாலும், அதை இணையத்தில் செலுத்தவே ஊக்குவிக்கின்றதென்பது, கவனிக்கத்தக்கது. ஆனால் இணைய வழி சேவையென்பது, கிராமங்களில் இருக்கும் பலருக்கும் கேள்விக்குறியாகியிருப்பதை தொடர்ந்து, இப்படியான ஒரு அறிவிப்பு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரொக்கத் தொகையாக செலுத்தப்படும் பணத்தை மருத்துவமனை நிர்வாகம் பெறும்போது, அந்த நபர் சில தகவல்களை தெரிவிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, அவர் யாருக்கு பணம் செலுத்துகிறார் (நோயாளி யார்), நோயாளிக்கு இவர் என்ன உறவுமுறை, இவருடைய ஆதார் அல்லது பான் கார்டு விபரம் என்ன போன்றவற்றை சொல்ல வேண்டியிருக்கும்.

அரசின் இந்த உத்தரவு, இம்மாத இறுதி வரை அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அதை விசாரித்த நீதிமன்றம், "கொரோனா நோயாளிகள் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்தும் வகையில் விதிகளைத் தளர்த்துவது குறித்து வருமான வரித்துறை பரிசீலிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.