ISRO Scientists pt desk
இந்தியா

பி.எஸ்.எல்.வி 4 (சி-55) ராக்கெட் மாதிரியுடன் ஏழுமலையானை வழிபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (சனிக்கிழமை) விண்ணில் செலுத்தப்பட இருக்கும் பி.எஸ்.எல்.வி 4 (சி55) ராக்கெட் மாதிரியுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏழுமலையானை வழிபட்டனர்.

Kaleel Rahman

இஸ்ரோ'வின் பி.எஸ்.எல்.வி 4 (சி.55) ராக்கெட், சிங்கப்பூரை சேர்ந்த 'டெலியோஸ் - 02' செயற்கைக்கோளை சுமந்தபடி நாளை பிற்பகல் 2:19 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நாட்டின் தகவல் தொடர்பு, புவி கண்காணிப்பு போன்றவற்றிக்கு பயன்படும் செயற்கைக் கோள்களை வடிவமைத்து அவற்றை, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி ஆகிய வகை ராக்கெட் உதவியுடன் ஏற்கெனவே விண்ணில் செலுத்தி புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.

PSLV 4 (C 55)

இந்நிலையில், வணிக நோக்குடன் வர்த்தக ரீதியாகவும் வெளிநாடுகளின் செயற்கைக் கோளையும் விண்ணில் நிலைநிறுத்தும் பணியிலும் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. அப்படி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி 4 (சி55) ராக்கெட், சிங்கப்பூரின் 'டெலியோஸ் - 02' செயற்கைக்கோளை சுமந்து நாளை பிற்பகல் 2:19 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இந்த செயற்கைகோள், புவி கண்காணிப்பு மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கு பயன்படக்கூடியது.

PSLV 4 (C 55)

இதையடுத்து பி.எஸ்.எல்.வி 4 (சி55) ராக்கெட் மாதிரியுடன் நேற்று இரவு திருப்பதி மலைக்கு சென்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு, இன்று காலை கோவிலுக்குச் சென்று சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டனர். அந்தக் குழுவில் இஸ்ரோவின் சந்தோஷ், யசோதா, சீனிவாச குப்தா, வனஜா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.