இந்தியா

சிறந்த பணிக்காக IEEE சைமன் ராமோ பதக்கம் வென்ற இஸ்ரோ தலைவர் சிவன் 

சிறந்த பணிக்காக IEEE சைமன் ராமோ பதக்கம் வென்ற இஸ்ரோ தலைவர் சிவன் 

EllusamyKarthik

மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர் கழகம் சார்பில் ஆண்டுதோறும் பொறியியல் துறையில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் விஞ்ஞானிகள், முனைவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு  ‘IEEE சைமன் ராமோ பதக்கம்’ கொடுக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான IEEE சைமன் ராமோ பதக்கம் இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவை முதன்மை நாடாக கொண்டு வருவதிலும், தேசிய விண்வெளி திட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றதிலும் கே.சிவனின் தலைமை பண்பை பாராட்டி இந்த பதக்கம் கொடுத்து கவுரவிக்கப்பட்டுள்ளார்.

இதே துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் பி.என். சுரேஷுக்கும்  IEEE சைமன் ராமோ பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 

பெங்களுருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இந்த பதக்க விழா இன்று நடைபெற்றது.