Ramesh pt desk
இந்தியா

“என்ன வீட்ல ட்ராப் பண்ணுங்க” - ஆம்புலன்ஸ்க்கு போன்போட்டு வரவழைத்து வம்பிழுத்த போதை ஆசாமி! வீடியோ

தெலுங்கானா மாநிலத்தில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்று ஆம்புலன்ஸை அழைத்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

webteam

தெலுங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டம் ஜனகாம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதிகளவு மது அருந்திவிட்டு போதையில் இருந்துள்ளார். இதனால் ரமேஷை யாரும் வாகனத்தில் ஏற்றவில்லை. இதையடுத்து போதை மயக்கத்தில் இருந்த அவர், தனது வீட்டிற்குச் செல்ல 108 ஆம்புலன்ஸ்-க்கு, விபத்து ஏற்பட்டதாக போன் செய்துள்ளார்.

108 ambulance

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்த நிலையில், அங்கு விபத்து ஏதும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ரமேஷிடம் கேட்டுள்ளனர். அதற்கு ரமேஷ் ”பேருந்து ஒன்று கூட நிற்காமல் சென்றதால் நான் ஆம்புலன்ஸ்-க்கு போன் செய்து வரவழைத்தேன். என்னை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்கி விட வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போதை ஆசாமிக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் இடையே நடந்த உரையாடலை பார்க்கலாம்...

போதை ஆசாமி: எனக்கு எமர்ஜென்சி.. நான் unconscious ஆ இருக்கேன்,

ஆம்புலன்ஸ் ஊழியர்: unconscious அர்த்தம் தெரியுமா?

போதை ஆசாமி: இப்போ அது பிரச்னை இல்ல சார்?

ஆம்புலன்ஸ் ஊழியர்: உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சா? ஆம்புலன்ஸ் எதுக்கு இருக்குன்னு தெரியுமா? ஆஸ்பிட்டல் போலாமா?

போதை ஆசாமி: உங்கிட்ட நான் சொல்றேன்ல.. இங்க இருந்து நான் ஊருக்கு போக எனக்கு பஸ் கூட கிடையாது. ஃபுல் டையர்டு.

ஆம்புலன்ஸ் ஊழியர்: பஸ் கிடைக்கலன்னு உங்கள அத்தை வீட்டுக்கெல்லாம் கூட்டிக்கிட்டு போக முடியாது,

போதை ஆசாமி: ஜனகம்ல இருக்குற ஆஸ்பிட்டல்ல சேத்து விடுங்க. புவனகிரி மாவட்ட மருத்துவமனை 4கிமீ தூரத்தில் உள்ளது.,

ஆம்புலன்ஸ் ஊழியர்; உடம்பு சரியில்லன்னா கூட்டிட்டு போறதுக்கு தான் ஆம்புலன்ஸ். பஸ் கிடைக்கலன்னா கூட்டிட்டு போறதுக்கு இல்ல..

என்று சொன்ன ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் தன்னை வீட்டில் கொண்டு விடுமாறு போதையில் இருந்த நபர் அடம்பிடித்துள்ளார். இந்த சுவாரஸ்ய சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.