உலக முட்டைகள் தினம் முகநூல்
இந்தியா

இன்று ’உலக முட்டைகள் தினம்’|குறைந்த விலையில் அதிக ஊட்டசத்து; சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

1996 ஆம் ஆண்டு முதலே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் 2 ஆவது வெள்ளிக்கிழமை ’உலக முட்டை தினமா’கக் கொண்டாடப்படுகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டசத்துகொண்ட உணவு ஒன்றுள்ளது அதுதான் முட்டை...

1996 ஆம் ஆண்டு முதலே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் 2 ஆவது வெள்ளிக்கிழமை ’உலக முட்டை தினமா’கக் கொண்டாடப்படுகிறது.

வெளிநாட்டை காட்டிலும் இந்தியாவில் முட்டை நுகர்வு குறைவு என்பதால் பொது மக்களிடையே முட்டை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறும் விதமாகவும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் 2வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், 2024 ஆம் ஆண்டு, உலக முட்டை தினத்தின் கருப்பொருளாக, “முட்டைகளால் ஒன்றுபடுவோம்” என்பதன் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது.

முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

  • வைட்டமின்கள் - ஏ, பி 12, பி 2, பி 5, இ , கோலின், சீயாந்தீன், பாஸ்பரஸ், செலினியம், கால்சியம், துத்தநாகம் போன்ற கனிமச்சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன.

  • காலையில் முட்டை சாப்பிடுவது ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவையும் பராமரிக்க உதவுகிறது.

  • 6 கிராம் புரதம் மற்றும் 5 கிராம் இதய ஆரோக்கியத்திற்கு உதவுன் வகையில் முட்டையில் கொழுப்பு உள்ளது.

  • லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் நிறைந்த முட்டையின் மஞ்சள் கரு, கண்புரை மற்றும் கண்களில் தசை சிதைவு அபாயத்தைக் குறைக்கும் பார்வை திறனை மேம்படுத்தும்.

  • முட்டையில் உள்ள கோலின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவுகிறது. நினைவக செயல்பாட்டையும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது

  • இதயம், மூளை ஆரோக்கியம் மற்றும் கண்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அதிக அளவு ஒமேகா 3 அமிலம் உள்ளது.

  • குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் படி, ஒரு ஆண்டிற்கு 180 முட்டை ஒரு நபருக்கு தேவை..ஆனால், நாடு முழுவதும் கிடைக்கும் சராசரி அளவு 79 முட்டைகள் மட்டுமே. இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவு என்று கூறுகிறது.

  • முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அடர்த்தி, ஜீரணிக்கும் திறன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வது முதளியவற்றை செய்கிறது.

  • முட்டையில் கலோரிகள் குறைவாக உள்ளது. இது உங்கள் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும், அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும் துணைப்புரிகிறது.