சர்வதேச பூனை தினம்  Facebook
இந்தியா

”பூனைகளின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மைக் கொண்டது” - பூனைகளை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

பூனை இனத்தை பாதுகாக்கும் வகையில், சர்வதேச விலங்குகள் நல நிதியத்தால், கடந்த 2002 ஆம் ஆண்டு சர்வதேச பூனை தினம் அறிவிக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி சர்வதேச பூனை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பூனை இனத்தை பாதுக்காக்கும் வகையில், சர்வதேச விலங்குகள் நல நிதியத்தால், கடந்த 2002-ஆம் ஆண்டு சர்வதேச பூனை தினம் அறிவிக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி சர்வதேச பூனை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை பூனைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே பிரிக்கமுடியாத உறவு ஒன்று உள்ளது. அது சகுனமாக இருந்தாலும் சரி, செல்லம் கொஞ்சுவதாக இருந்தாலும் சரி..

கருப்பு, சாம்பல் நிற பூனை வீட்டில் நுழைந்தால் அது அதிர்ஷ்டம் என்றும், வெளியே பயணம் மேற்கொள்ள கிளம்பும்போது பூனை இடது புறமாக சென்றால் அது நல்ல சகுணம் என்றும், பூனை மூன்று முறை தன் காதை நக்கினால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்றும் எத்தனை, எத்தனையோ நம்பிக்கைகள் மக்களிடத்தில் உள்ளன.

மேலும், மத்திய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் கெட்ட சகுனமாகக் கருதப்படும் மூடநம்பிக்கை பரவியது. இதனால் 1600-கள் வரை ஆயிரக்கணக்கான பூனைகள் உலகெங்கிலும் கொல்லப்பட்ட வரலாறும் உள்ளது.

பூனைகளைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

  • பூனைகளால் தங்களின் காதுகளை தனித்தனியாக கட்டுப்படுத்த முடியும். காதுகளை 180 டிகிரிக்கு நகர்த்தவும் முடியும்.

  • 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஒலிகளை உருவாக்க முடியும்.

  • பூனைகள் தங்களைப்போல ஆறு மடங்கு உயரத்தில் குதிக்கும்.

  • பூனைகள் மரத்திலிருந்து இறங்கும்போது முதலில் தலையை முன்னிருத்த முடியாது, இவை தங்களின் நகங்கள் செல்லும் திசையை நோக்கிதான் பயணிக்கின்றன.

  • பூனைகள் மியாவ் என்று குறிப்பிடுவது, மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கு மட்டுமே. தங்களின் சக பூனைகளோடு மியாவ் சத்தம் அரிதாகவே எழுப்புகின்றனவாம்.. மாறாக அவை உடல் மொழி, வாசனை போன்றவற்றை வைத்தே ஒன்றுடன் ஒன்றை தொடர்பை ஏற்படுத்துகின்றன.

  • எப்படி ஒவ்வொரு மனிதருக்கு தனித்துவமான கைரேகைகள் இருக்கிறதோ.. அதேபோல ஒவ்வொரு பூனையின் மூக்கும் தனித்துவமானது

  • பூனைகளை பொறுத்தவரை தங்களை சுத்தம் செய்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருக்குமாம்.இதனாலேயே தன்னை நாக்குகளால் நக்கி சுத்தம் செய்து கொள்கின்றன.

  • பூனைகள் தங்கள் பாதங்கள் வழியாக வியர்க்கின்றன.

  • பூனைகளின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மைக் கொண்டது. வேட்டையாடியாக இருப்பதால் இரையை தேடி பல இடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் தான் செல்லும் இடங்களில் சிறுநீர் இருந்தவாறே பூனைகள் செல்லும்.

  • பூனைகளின் உடல் தசைகள் மிகவும் நெகிழ்வுத்தன்மை மிக்கது. ரப்பரை போல வளையும் திறன் பூனைகளுக்கு உண்டு. எனவே, எத்தனை மாடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் பூனைகள் அடிபடாமல் உயிர்பிழைத்துக் கொள்ள முடியும்.

  • பூனைகள் தோராயமாக 45-80 மில்லியன் scent receptors ஐ கொண்டுள்ளதாம். ஆனால், இதுவே மனிதர்களில் உள்ள வாசனை வாங்கிகள் (scent receptors) என்பது 5-2 மில்லியன் மட்டுமே.

  • பூனைகள் தங்களின் வாழ்நாளில் 70% தூங்கிக்கொண்டுதான் இருக்கிறதாம்.

  • பூனைகளால் இனிப்பு சுவையை கண்டறிய முடியாது.

  • இவற்றிக்கு காயம் ஏற்பட்டால், கத்துவதன் மூலம் தன்னை குணப்படுத்த முடியும்

  • பண்டைய காலங்களில் எகிப்தில் வழிப்பாட்டு விலங்குகளாக பூனைகள் இருந்துள்ளன. ஆகவே, அப்போது இவை இறந்தால் பிரமிடுகள் கட்டி, அதில் புதைத்து விடுவார்களாம்.

இத்தனை வகைகளா...

பூனைகளில் உலகம் முழுவதும் சுமார் 40 வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவே, இந்தியாவை பொறுத்தமட்டில், 8 பூனை வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவற்றில் செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கு சிறந்த பூனை இனங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

அபிசீனிய பூனைகள்:(abyssinian cats)

abyssinian cats)

இவை மிகவும் ஆற்றல் கொண்டவை, புத்திசாலிகள், ஆய்வு போன்றவற்றை மேற்கொள்ள சிறந்த இனமாக இவற்றை தேர்ந்தெடுக்கலாம்.

ஸ்காட்டிஷ் மடிப்பு பூனைகள் (scottish fold cats)

இவற்றின் மடிந்த காதுகள்தான் தனித்துவமே...இவை குணங்களில் அமைதியாகவும் ,பொறுமைசாலியாகவும், மனிதர்களோடு நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் இருக்குமாம்.

scottish fold cats

ஸ்பிங்க்ஸ் பூனைகள் (sphynx cats)

sphynx cats

இவற்றிக்கு உடலில் ரோமங்களே இருப்பதில்லை.. அதிக பாசம் கொண்டவை, ஆளுமைக்கு பெயர் பெற்றவை..