இந்திய விமான நிலையம் மற்றும் விமானங்களில் இந்திய இசை வாத்தியங்களை இசைக்க விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் இந்திய இசைக்கருவிகளின் இசைகளை இசைக்கும் முடிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளதா? மற்றும் விமான பயணத்தின் போது பொழுதுபோக்கை மேம்படுத்த மத்திய அரசிடம் திட்டங்கள் உள்ளதா? என நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறையின் இணை அமைச்சர் வி.கே சிங், இந்திய விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைக்க வேண்டும் என கட்டாயமாக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் இந்திய இசை வாத்தியங்களை இசைக்கலாம் என்ற முடிவை விமான நிறுவனங்கள் கருத்தில் கொள்ளுமாறு இந்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.