இந்தியா

பழங்களை சாப்பிட வலியுறுத்தி புதுச்சேரி ஆழ்கடலில் நடைபெற்ற விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் விழா

பழங்களை சாப்பிட வலியுறுத்தி புதுச்சேரி ஆழ்கடலில் நடைபெற்ற விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் விழா

kaleelrahman

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உடலுக்கு ஆரோக்கியமான பழங்களை உண்ணவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆழ்கடலுக்குச் சென்ற கிறிஸ்துமஸ் தாத்தா பழங்களை பரிசாக வழங்கிய காட்சி சமூக ஆர்வலர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் ஆழ்கடல் பயிற்சி மையம் நடத்தி வருபவர் அரவிந்த். இவர் கடல் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், கடலின் தூய்மை பற்றியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆழ்கடலுக்குள் நிகழ்த்தி வருகிறார். இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி ஆழ்கடலில் 60 அடி ஆழத்தில் தனது நீச்சல் வீரர்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று கொரோனா காலத்தில் மக்கள் அதிகளவு பழங்களை உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆரஞ்சு, வாழை பழங்களை கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கி விழிப்புணவை ஏற்படுத்தினார். இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் அரவிந்த் குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.