இந்தியா

போலீஸாக விரும்பும் சிறுவனுக்கு ஆசிரியராக மாறிய போலீஸ்!

போலீஸாக விரும்பும் சிறுவனுக்கு ஆசிரியராக மாறிய போலீஸ்!

JustinDurai

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பணியாற்றிவரும் போலீஸ் அதிகாரியான வினோத் தீட்சித், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு கடந்த ஒரு மாதமாக ஆங்கிலம் மற்றும் கணிதப்  பாடங்கள் சொல்லிக் கொடுத்து வருகிறார்.

ஊரடங்கு காலத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியான வினோத் தீட்சித், இந்தூரில் ராஜ் என்ற சிறுவனை சந்தித்துள்ளார். ராஜின் பேச்சிலும் நடவடிக்கையிலும் புத்திசாலித்தனம் தெரிந்தது.

ராஜிக்கு போலீஸ் ஆவதே லட்சியம் என்பதை அறிந்து கொண்ட வினோத் தீட்சித், ராஜிடம் என்ன மாதிரியான உதவி வேண்டும் எனக் கேட்டுள்ளார் அவர். தான் படிக்க வேண்டும் என்றும் யாராவது எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தால் கற்றுக் கொள்வேன் எனவும் சிறுவன் கூறியுள்ளான்.

ராஜ் ஏழ்மையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவன். அவரது தந்தை மற்றும் தாத்தா இருவரும் நடைபாதை வியாபாரிகள். இதனால் கடந்த ஒரு மாதமாக ராஜிக்கு ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை கற்றுக் கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து சிறுவன் ராஜ் கூறும்போது, ‘’என் மாமா ஜி அவர்களால் நான் கற்பிக்கப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு நாளும் நான் அவரிடமிருந்து பயிற்சி பெறுகிறேன். நான் ஒவ்வொரு நாளும் எனது வீட்டுப்பாடம் செய்கிறேன். நான் ஒரு காவலராக ஆக விரும்புகிறேன், அதனால்தான் நான் படிக்கிறேன்." என்றார்.