இந்தியா

இந்தூர் செல்ல வேண்டியவரை நாக்பூர் பிளைட்டில் ஏற்றி அனுப்பிய இண்டிகோ

இந்தூர் செல்ல வேண்டியவரை நாக்பூர் பிளைட்டில் ஏற்றி அனுப்பிய இண்டிகோ

webteam

விமானப் பயணி ஒருவரை அடித்ததாக இண்டிகோ நிறுவனம் மீது கடும் விமர்சனங்கள் ஏற்கெனவே எழுந்தது. இந்நிலையில், டெல்லியில் இருந்து இந்தூருக்கு செல்ல வேண்டிய பயணி ஒருவரை நாக்பூருக்கு மாற்றி அனுப்பியிருக்கிறது இண்டிகோ நிறுவனம்.

பயணி ஒருவர் வழக்கம் போல பரபரப்பாக இருக்கும் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், இந்தூருக்கு செல்ல முன்பதிவு செய்து வந்துள்ளார். அவருக்குப் பயணச்சீட்டு கொடுக்கப்பட்டு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறது இண்டிகோ. அந்தப் பயணியும் இந்தூருக்குதான் செல்கிறோம் என நினைத்துக் கொண்டு ஜாலியாக சென்றிருக்கிறார். ஆனால் நாக்பூர் வந்துவிட்டது, தங்கள் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள் என பணிப்பெண் சொன்னபோதுதான் அவருக்கு தூக்கி வாரிப்போட்டது.

நான் இந்தூருக்கு போக வேண்டும், நாக்பூர் ஏன் கூட்டிட்டு வந்தீர்கள் என கேட்க, இது நாக்பூர் ஃபிளைட் என பயணிகள் அனைவரும் ஒருமித்தக் குரலில் கூறியுள்ளனர். செய்வதறியாது திகைத்த அவரை, இண்டிகோ நிறுவன அதிகாரிகள் வந்து சந்தித்து, இந்தூருக்கு அனுப்பி வைப்பதாக கூறிய பின் மனிதர் சமாதானம் ஆகியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் கவனக்குறைவால் இது நிகழ்ந்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட பயணி மற்றும் அவரது உடமைகள் பத்திரமாக இந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.