இந்தியா

முறையான சேவை வழங்காததற்கு மன்னிப்பு கோரிய இண்டிகோ..!

முறையான சேவை வழங்காததற்கு மன்னிப்பு கோரிய இண்டிகோ..!

Rasus

பாட்னா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி நரசிம்மரெட்டி, போர்டிங் பாஸ் இருந்தும் இண்டிகோ விமானம் தன்னை ஏற்றாமல் புறப்பட்டு சென்றதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு‌ விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

பாட்னா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைவருமான நரசிம்ம ரெட்டி, இண்டிகோ விமானம் மூலம் பெங்களூருவுக்கு செல்வதற்காக திங்கள்கிழமை ஐதராபாத் விமானநிலையத்திற்கு சென்றார். போர்டிங் பாஸ் வாங்கி தயாராக இருந்த நிலையிலும் தன்னை அனுமதிக்கவில்லை என்றும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விமானம் புறப்பட்டு விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பின்னர் வேறு விமானம் மூலம் தான் பெங்களூரு சென்று இணைப்பு விமானத்தில் புறப்பட இருந்த நிலையில், தன்னுடைய டிக்கெட்டை இண்டிகோ விமான நிறுவனம் ரத்து செய்திருந்தது தெரியவந்ததாக கூறியுள்ள நரசிம்ம ரெட்டி, இது ஏமாற்று வேலை என சாடியுள்ளார்.

இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேச இருப்பதாக அவர் தெரிவித்த நிலையில், இண்டிகோ நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரியுள்ளது. முறையான சேவை வழங்க முடியாமைக்கு வருத்தம் தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், வருங்காலங்களில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.