நடுவானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து திரிபுரா தலைநகர் அகர்தாலாவுக்கு இண்டிகோ விமானம் கடந்த 2-ம் தேதி சென்று கொண்டிருந்தது. அப்போது அகர்தாலாவில் இருந்து கொல்கத்தாவுக்கு ஏர் டெக்கான் விமானம் வந்துகொண்டிருந்தது. பங்களாதேஷ் தலைநகர் டாக்கா வான்பகுதியில் சென்றபோது இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் வந்தன.
மிகவும் நெருங்கி வந்ததை அடுத்து இரண்டு விமாங்களிலும் அபாய ஒலி எழுந்தது. இதையடுத்து விமானிகள் பரபரப்பானார்கள். பின்னர் விமான நிலைய கன்ட்ரோல் ரூமில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு விமானத்தின் பறக்கும் உயரம் உடனடியாக மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கடந்த 2-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.